srimath bhagavat gita

  கீதா ஸாரம்


sri  krishnar and  Arjunan


adyayam 1

adyayam 2

adyayam 3
adyayam 4

adyayam 5

adyayam 6

adyayam 7

adyayam 8

adyayam 9

adyayam 10
adyayam 11

adyayam 12

adyayam 13

adyayam 14

adyayam 15


sri vellukudi krishnan swami - kinchitkaram trust. 







கீதா ஸாரம்



நடைமுறை கீதை (கீதையில் ஓர் உபதேசத்தை வாரந்தோறும் தொடர்ந்து கடைப்பிடிப்போம் )


1. எந்நிலையிலும் மன வலிமையை இழக்காதே.

2. உடல் அழியும்: அத்மா அழியாது என்று உணர்க.

3. ஆத்மா இயற்கையில் அறிவே உருவானது, இன்பமயமானது என்று அறிக.

4. சண்டைகளத்தில் இருந்து ஓடுவது கோழைத்தனம்: வாழ்க்கைகளத்தில் தைர்யமாக
நின்று வெற்றிகொள்.

5. இன்பதுன்பம், லாப நஷ்டம், வெற்றி தோல்வி ஆகியவற்றை ஸமமாக நினைக்க மனதைப்பழக்கு.

6. உனக்குரிய செயலைச் செய்: பயனைக் கருதாதே: செய்யாமல் இருக்காதே.

7. புலன்களை அடக்க அவற்றைக் கண்ணனின் அழகிய திருமேனியில் செலுத்தி த்யானம் செய்.

8. நான் செய்கிறேன் என்ற என்ணத்தைத் துறந்து பற்றில்லாமல் உன் கர்மங்களை செய்.

9. ரஜோகுணத்தால் உண்டாகும் காமத்தையும், கோபத்தையும் பகைவனாக எண்ணி வெற்றிகொள்.

10. கண்ணனுக்குப் படைத்த உணவின் மிச்சத்தையே எப்போதும் உண்க.

11. எம்பெருமானை நினைத்துக் கொண்டு ஒவ்வொரு நாளும் மூன்று முறை பத்து ப்ரணாயாமங்கள் செய்க.

12. புண்ய தீர்த்தங்களுக்கும் திருத்தலங்களுக்கும் செல்க.

13. நாம் செய்யும் கர்மத்தில்,செயலைவிட இது இறைவனுக்காக என்று அறிவே முக்கியம் என்று உணர்க.

14. பசு, யானை, நாய், மனிதன் ஆகிய எவற்றுள் இறுக்கும் ஆத்மாக்களும் ஜ்ஞான வடிவத்தால் ஸமமானவர்களே என்ற ஸமதர்சன அறிவை வளர்த்துக் கொள்.

15. பற்றற்ற மனம் ஆத்மாவை உயர்த்தும்; பற்றுள்ள மனம் ஆத்மாவை ஸம்ஸாரத்தில் கட்டும் என்றறிந்து மனத்தைப் பழக்கு.

16. சுத்தமான இடத்தில தனிமையில் பத்மாஸனத்தில் அமர்ந்து மனத்தை அடக்கி, பகவானை நினைத்து, நாள் தோறும் முப்பது நிமிடங்கள் த்யானம் செய்.

17. முக்குனமயமான உலக கட்டுகளில் இருந்து விடுபட கண்ணனை வேண்டிக்கொள்.

18. அனைத்துக்கும் காரணமாகிய வாஸுதேவனையே உண்ணும் சோறு பருகு நீராகக் கொள்.

19. கடைசிக் காலத்தில் திருமாலை நினைத்துக்கொண்டே உயிர் துறப்பவன் மோக்ஷம் அடைகிறான்; ஆகையால் எப்போதும் அவனை எண்ணுக.

20. மறுபடியும் பிறவி வேண்டுமா அல்லது வேண்டாமா என்று யோசித்து முடிவெடு.

21. பிறவி வேண்டாதவர்கள் மீளுதல் இல்லாத வைகுந்தத்தை அடையும் ஒளிமயமான அர்ச்சிராதிப் பாதையில் ஆசைகொள்.

22. ப்ரபஞ்சமே பரம்பொருளால் தாங்கப்படுகிறது; பரம் பொருள் நம் ஒவ்வொருவருக்குள்ளும் மறைந்து உறைகிறான் என்று உணர்க.

23. கண்ணனின் மனித உடலையும், விளையாட்டுகளையும் மட்டுமே பார்த்து அவனைக் குறைவாக மதிப்பிட்டு வீணாகாதே.

24. பயன் கருதாமல் கண்ணனிடம் பக்தி செய்தால் அவனே பொறுப்பேற்று தன்னையே கொடுக்கிறான் என்று உணர்க.

25. இலை, பூ, பழம், தண்ணீர்- ஏதோவொன்றை உண்மையான பக்தியோடு கொடு; கண்ணன் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வான்.

26. பகவானின் கதைகளை உள்ளன்போடு உற்றார் உறவினரிடம் சொல்லி மகிழ்.

27. ப்ரபஞ்சம் முழுவதும் கண்ணனின் உடைமை என்று உணர்க.

28. விஸ்வரூப தர்சனத்தை வரைப்படத்தில் பார்த்து மனத்தில் நிறுத்த முயல்க.

29. நாம் ஒவ்வொருவரும் பரம்பொருளின் திருமேனியின் ஒரு சிறு பகுதி என்ற பெருமையை உணர்.

30. முதலும் நடுவும் முடிவும் அற்ற கண்ணனின் கையில் நாம் ஒரு கருவி என்றறிந்து பொறுப்போடு நட.

31. பரம்பொருளை தாயும் தந்தையுமாக மதித்துப் பூசி.

32. கண்ணனை அறியவும், காணவும், அடையவும், பக்தி ஒன்றே வழி என்று உறுதி கொள்.

33. பகவானின் மங்கலமான குணங்களை விழிக்கும் போதும், தூங்கப்போகும் போதும், நினை.

34. எந்த ஜீவராசிகளிடமும் பகைக்காமல் நட்பையும், கருணையையும், காட்டு.

35. சித் (அறிவுடைய ஆத்மா), அசித் (அறிவற்ற உடல்), ஈஸ்வரன் (பரம்பொருள்), ஆகிய மூன்று தத்துவங்களை, உணர்.

36. பகவத் பக்தர்களை மதி; டாம்பீகம் காட்டாதே; அகிம்சையை பழகு;
நேர்மையோடு இரு; ஆசார்யனைப் பூசி.

37. அனைவருக்குள்ளும் ஒரே பரமாத்மா இருப்பதால், ஆத்மாக்களுக்குள் விரோதமே கூடாது என்று அறி.

38. ரஜோகுண தமோகுனத்தைக் கட்டுபடுத்தி ஸத்வ குணத்தை வளர்ப்பாய்.

39. ஸம்சாரமாகிற தீய தலைகீழ் அரசமரத்தை பற்றின்மையாகிற கோடரியால் வெட்டு.

40. சூரியன், சந்திரன், நெறுப்பு, ஆகியவை உட்பட எல்லாப்பொருட்களையும் ஆத்மாவே தன் அறிவாலே விளங்கச் செய்பவன் என்று உணர்.

41. கண்ணனே நம் வயிற்றில் இருந்து உணவை ஜீரணிக்கச் செய்பவன்; நமக்குள் நீக்கமற நிறைந்திருப்பவன் என்று உணர்.

42. எல்லாவற்றையும் தாங்கி எதிலும் நிறைந்து, அனைத்தும் உடையவனான படியால் கண்ணனே வேதங்களால் போற்றப்படும் புருஷோத்தமன் என்று அறி.

43. பகவான் எப்பிறவி எடுத்தாலும் அவன் பெருமைகளில் ஒன்றுகூட குறைவதில்லை என்று உறுதி கொள்.